ஈழத்தமிழர்கள் நாள்தோறும் சிங்கள இனவெறி அரச பயங்கரவாதத்தால் படுகொலை செய்யப்பட்டு வருகிறார்கள். தற்போது சிங்கள இனவெறி அரசு காட்டுமிராண்டித்தனமான முப்படைத்தாக்குதலை நடத்தி வருகிறது. இதற்கு இந்திய அரசுதான் போரை பின்னிருந்து நடத்துக்கிறது. இதை கண்டித்தும் தமிழீழத்தை அங்கீகரிக்ககோரி புரட்சிகர இளைஞர் முன்னணி சார்பாக சென்னையை அடுத்த பொன்னேரி தமிழின உணர்வாளர்கள் 19.11.2008 அன்று காலை 7 மணி முதல் மாலை 5 மணி வரை உண்ணநிலை போராட்டம் நடைபெற்றது, இதில் 150 க்கும் மேற்பட்ட தமிழின உணர்வாளர்கள், புரட்சிகர இளைஞர் முன்னணி ,புரட்சிகர தொழிலாளர் முன்னணி, ஒடுக்கப்பட்ட மக்கள் விடுதலை முன்னணி, விடுதலை சிறுத்தைகள் ஆகிய அமைப்புகள் கலந்துக்கொண்டன.
இவ் உண்ணாநிலை போராட்டத்திற்கு தோழர்.மலையப்பன் தலைமை வகித்தார். ஒ.ம.வி.மு தமிழரசு , பு.இ.மு அறிவுமதி ,பு.தொ.மு மாறன், வழக்குரைஞர் பொன்செல்வன் வழக்குரைஞர் லெனின், பெ.தி.க வெள்ளைச்சாமி, வி.சி ஜெயபிராகாசு , பி.எஸ்.பி ராஜா ஆகியோர் கண்டன உரையாற்றினர். இந்நிகழ்ச்சியை புரட்சிகர இளைஞர் முன்னணி ஒருங்கிணைத்தது.

செய்தி : கபிலன்
No comments:
Post a Comment